வெள்ளி, 8 நவம்பர், 2013

வருக வருகவே

எனது வலைப்பூ " இலக்கணத் தேறல்".
தேடினால் எளிதில் கிட்டும்
தமிழின் மயக்கம்  இங்கு தெளிவாகும்.
மயக்கும் தேறல் அன்று , இது
தெளிய வைக்கும் தேறல்.
இலக்கணத் தேடல், சமூகப் பார்வை,
கல்விச் சிந்தனை முதலானவற்றை அடக்கும் தேத்திறால்..
    வருக வருக உங்களை ஆலோசனை தருக 

5 கருத்துகள்:

  1. அன்பினிய கோபி, உங்கள் வலைப்பக்கம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்
    தொடர்ந்து எழுதுங்கள், மற்றவர் வலைப்பக்கம் சென்று, படித்து, கருத்து எழுதும்போது உங்கள் வலைப்பக்க முகவரியும் இட்டுவாருங்கள்.தொடர்வோர் பட்டியல் தமிழ்மணத்தில இணையுங்கள்.மாதிரிக்கு எனது வலைப்பக்கம் பார்க்க - அன்புடன்,
    நா.முத்துநிலவன், புதுக்கோட்டை. http://valarumkavithai.blogspot.in/

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நண்பரே..
    வருக இணைய உலகில் தங்களது பங்களிப்பைத் தருக. இலக்கணத்தில் தாங்கள் அறியாதது இல்லை என்பதே நான் அறிவேன். தங்கள் தளத்தில் பதிவாக காண ஆவலோடு உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பூவின் தலைப்பு சற்று எளிமையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன். இலக்கணம் மட்டுமே பகிர்வீர்களாயின் இத்தலைப்பு இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. இனிய நண்ப!
    இலக்கணம் பற்றிய தெளிவை தனி வலைப்பூவாக நடாத்த வாழ்த்துகள். எனது பார்வையில் தமிழையே மறக்கும் நம் உறவுகளுக்கு தமிழ் பற்றிய தெளிவை வழங்குவதாக இருக்கும். இது ஒரு கடினமான பணி. ஆயினும், தங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. வேம்பின் பைங்காய் என்தோழி தரினே தேம்பூங் கட்டி எனத் தலைவன் களவு காலத்தில் சுவைத்ததாக நம் சங்க இலக்கியத்தில் எப்போதோ படித்திருக்கிறேன். இலக்கணம் எக்காலத்திலும் அப்படித்தான் இருக்க வேண்டும். இருக்கச் செய்யும் வல்லமை வாய்த்திருக்கிறது உங்களுக்கு!
    உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
    காலமும் இருக்கிறது. தமிழ் பேசுவோம். நன்றி!

    பதிலளிநீக்கு

>