வெள்ளி, 8 நவம்பர், 2013

மரபுகள்

ஒல்காப் பெரும் புகழ் தொல்காப்பியம் தனது பொருளதிகாரத்தில் மரபு பற்றிய இலக்கணத்தை மரபியலில் உரைக்கின்றது. மகவு, குட்டி, கன்று, பார்ப்பு, பறழ், குருளை, பிள்ளை முதலியன இளமைப் பெயர்கள். அந்த வகையில் மாட்டின் இளமைப் பெயர் கன்று. மனிதனின் இளமைப் பெயர் மகவு, பிள்ளை என்பன. பறவைகளின் இளமைப்பெயர் பார்ப்பு. மானின் இளமைப் பெயர் கன்று.
          ஆனால், சமீபத்திய திரைப்படப் பாடல் ஒன்றில் " மான் குட்டியே புள்ளி மான் குட்டியே" என வருகிறது.  இந்தப் பாடல் வரிகளைக் கேட்கின்ற மாணவர்கள் தமிழ் மொழிப் பயிற்சிக்கு விடையளிக்கும் போது " மான் கன்று " என்று எழுதுவதற்குப் பதிலாக மான் குட்டி என்று விடையளிக்கின்றனர்.
          ஊடகத்தின் தாக்கம் இலக்கணத்தை விஞ்சி விட்டது. எனவே, மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கின்ற பொது தற்போதைய திரைப் படங்களில் வரும் காட்சிகளைக் கொண்டு விளக்குவது மட்டுமின்றி, தவறாக இடம் பெரும் தகவல்களையும் சரிப் படுத்திச் சொல்லித் தர வேண்டிய கட்டாயம் நம் மொழி ஆசிரியர்களுக்கு உண்டு. 

1 கருத்து:

  1. ஆம் கோபி, அவ்வைத்தாய் பாடிச் சொல்வதைவிடவும் ஐஸ்வர்யா ராய் ஆடிச்சொன்னதையல்லவா நம் இளையவர்கள் நம்புகிறார்கள்! சலசல - இரட்டைக்கிளவி,சரி. சலசலசலசல இரட்டைக்கிளவியா? இதுபோலும் சந்தேகங்களை எழுப்பி அவ்வப்போது விடைதருக. உங்கள் வலைப்பக்கத்தை எனது “நண்பர்கள் வலைப்பக்கத்தையும் பார்க்க..“ பகுதியில் இணைத்திருக்கிறேன். பாருங்கள். நம் அய்யா, முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் “நடைநமது” வலைப்பக்கம் பார்த்து உங்கள் கருத்துகளை இடவேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு

>