திங்கள், 14 ஏப்ரல், 2014

ஏழு - ஏழ்


              தமிழ் மொழியில் உள்ள எண்ணுப் பெயர்கள் குற்றியலுகரச் சொற்களாகவே உள்ளன. ஆனால் எண் ஏழு என்பது மட்டும் அதில் விலகி உள்ளதைத் தொல்காப்பியத்தின் மூலம் நாம் உணரலாம். ஆம் நண்பர்களே!  எண் ஏழு குற்றியலுகரச் சொல்லா என்பதில் சற்று ஐயம்.  ஏழ் என்பதே சரியான வடிவம்.  தொல்காப்பியத்தில் எண்ணுப் பெயர்ப் புணர்ச்சிகள் யாவும் குற்றியலுகரப் புணரியலில் கூறப் பட, ஏழு என்பதற்குரிய புணர்ச்சி மட்டும் மெய்யீற்றுப் புணரியலில் தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். ஆகவே, ஏழு என்பது ஏழ் என்று வழங்கியதை நாம் உணர்வோமாக.

            ஏழு எனும் சொல்லில் தான் எவ்வளவு செய்திகள்... சமீபத்தில் தொகை அகராதி எனும் நூலை வாசித்தேன். அதில் எண் ஏழு பற்றி நிறைய தகவல்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன. அவற்றை நம் வலைப்பூவில் பகிர்ந்து கொள்கிறேன்.
 எழுகடல் :  உப்புக் கடல், தேன் கடல், கருப்பஞ்சாற்றுக் கடல், தயிர்க் கடல், நெய்க் கடல், பாற்கடல், சுத்தநீர்க் கடல்
ஏழு பருவ மகளிர்: பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்
எழுபிறப்பு: தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம்
எழுவகைத் தாது: தோல், இரத்தம், இறைச்சி, மேதை, எலும்பு, மச்சி, சுவேத நீர்
எழுவகை மாதர்: அபிராமி, மகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மாகேஸ்வரி, மாகாளி
எழுவகை மேகங்கள்: சம்வர்த்தம், ஆவர்த்தம், புத்களா வர்த்தம், சந்காரித்தம், துரோணம், காளமுகி, நீலவருணம்
எழுவகைக் கீழ்  உலகங்கள்: அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதலம்
எழுவகை மேல் உலகங்கள்: பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகாலோகம், ஜனலோகம், தவலோகம், சத்தியலோகம்
அகத்திணைகள்:  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
புறத்திணைகள்: வெட்சி, வஞ்சி, காஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண்
இசை:  குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்
உலோகங்கள்: செம்பொன், வெண்பொன், இரும்பு, ஈயம், வெண்கலம்,செம்பு, தரா
அளவைகள்: நிறுத்தல், பெய்தல், சார்த்தல், நீட்டல், முகத்தல், தெறித்தல், எண்ணுதல்
நதிகள்: கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, காவிரி, குமரி, கோதாவரி
சுரங்கள்: ச, ரி, க, ம, ப, த, நி
தாளங்கள்: துருவம், மத்தியம், ரூபகம், சம்பை, திரிபுடை, அடதாளம், ஏக தாளம்
சப்தபுரிகள்: அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்திகை, துவாரகை
முதல் ஏழு வள்ளல்கள்: குமணன், சகரன், சகாரன், செம்பியன், துந்துமாரி, நளன், நிருதி
இடை ஏழு வள்ளல்கள்: அக்குரன், சந்திமான், சிசுபாலன், தந்த வக்கிரன், கன்னன், சந்தன்
கடை ஏழு வள்ளல்கள்: எழினி, ஓரி, காரி, நள்ளி, பாரி, பேகன், மலையன்  
நிறங்கள்:  ஊதா, நீலம், கருநீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு 
இன்னும் இன்னும் எவ்வளவோ!!! 

3 கருத்துகள்:

  1. இனிய சித்திரைத் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. ஏழ் எனும் எண்ணின் இலக்கியத் தரவுகளை அடுக்கப்போகிறீர்கள் என்று ஆவலுடன் தொடர்நதால்... ஏமாற்றிவிட்டீரகள் கோபி.இவையெல்லாம் நம் பழம்பித்துப் புலவர்களின் சொலவிளையாட்டுகள். ஒன்றில் கூட அறிவியல் பார்வையில்லை. (பெரிய மனது பண்ணி சப்த ரிஷிகளை மட்டும் விட்டுவிட்டீர்கள்! ) மன்னிக்கவும். இவ்வாறான ஆய்வை கோபியிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு

>