செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

தமிழ் வாசிப்புப் பயிற்சிக் கையேடு உருவாக்கம்

             பள்ளிக்கல்வித் துறை திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் தமிழ் வாசித்தல் திறன் குறைவாக உள்ள மாணவர்களை முன்னேற்றும் வகையில் தமிழ் வாசிப்புப் பயிற்சிக் கையேடு ஒன்றை உருவாக்கிட, குழு அமைக்கப்பட்டது. அதில் நான் உள்பட பத்துத் தமிழாசிரியர்கள் இடம்பெற்றுள்ளோம். 35 நாள்கள் உழைப்பின் விளைவில் உருவானது இந்தத் தமிழ்ப் பயிற்சிக் கையேடு. இது வெறும் அச்சு நூலாக இல்லாமல், இடைஇடையே கொடுக்கப்பட்டுள்ள உரலியின் மூலம் எழுத்துகளின் ஒலிப்பு முறையைக் கற்றுத்தரும் காணொளிகள் இணையம் வழியாக உங்கள் வாசலுக்கு வந்து வண்டமிழை வளப்படுத்தும்.  கையேட்டின் இறுதியில் தமிழ் இணைய வளங்களுக்கான உரலிகள் தரப்பட்டுள்ளன.  அயலகத் தமிழர், அயல் நாட்டில் உள்ளோர் தமிழைக் கற்பதற்கு இந்நூல் ஓர் இன்னூல். கீழே தரப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கி “தமிழ் வாசிப்புப் பயிற்சிக் கையேட்டினை” தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் தமிழ் நெஞ்சங்களே!

தமிழ் வாசிப்புப் பயிற்சிக் கையேடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

>